பொங்கல் பண்டிகை: மஞ்சள் செடி அறுவடை பணி தீவிரம் - உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அருகே மஞ்சள் செடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-01-13 03:09 GMT
பாலமேடு,  ஏர்ரம்பட்டி, கொழிஞ்சிபட்டி ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட  பகுதிகளில்  மஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. 

தைப் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், மஞ்சள் செடிகளை  அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மஞ்சள் செடிகளுக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்