சேலம் : ஒன்றிய குழு தலைவர் பதவி - அதிமுக வெற்றி

சேலம் அயோத்தியப்பட்டினம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பார்வதி மணியும், திமுக சார்பில் ஹேமலதாவும் போட்டியிட்ட நிலையில், இருவரும், பெரும்பான்மை இன்றி சரிசமமாக இருந்தனர்.

Update: 2020-01-12 03:47 GMT
சேலம் அயோத்தியப்பட்டினம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பார்வதி மணியும், திமுக சார்பில் ஹேமலதாவும் போட்டியிட்ட நிலையில், இருவரும், பெரும்பான்மை இன்றி சரிசமமாக இருந்தனர். இந்நிலையில், அதிமுகவை சார்ந்த பார்வதி மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், திமுகவை சேர்ந்த பவுன்சர்கள், தொண்டர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, போலீசாரை தாக்க முயன்ற பவுன்சர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்