எம்.எல். ஏக்களுக்கு காபியுடன் ஸ்நாக்ஸ் - துரைமுருகன் கோரிக்கையை ஏற்றார் பேரவை தலைவர்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் செம்மலை , முதலமைச்சரை பாராட்டிய போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், செம்மலையை தமக்கு 50 ஆண்டுகளாக தெரியும் என்றும் அவரை இப்படி பேச வைத்த முதலமைச்சரை தான் தான் பாராட்ட வேண்டும் என கூறினார்.

Update: 2020-01-07 18:52 GMT
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் செம்மலை , முதலமைச்சரை பாராட்டிய போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், செம்மலையை தமக்கு 50 ஆண்டுகளாக தெரியும் என்றும் அவரை  இப்படி பேச வைத்த முதலமைச்சரை தான்  தான் பாராட்ட வேண்டும்  என கூறினார். உடனே குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  தங்களுக்குள்  சிண்டு முடியும் வேலையை  துரைமுருகன் பார்ப்பதாகவும், அதில் தாங்கள் சிக்க மாட்டோம் என்றும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், சட்டப்பேரவையில் குடிக்க நல்ல காபி கூட கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டார். காபி கேட்டால் சுடு தண்ணீர் தான் தருவதாக வேதனை தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர்,  இனி காபியுடன் ஸ்னாக்ஸும் கொடுக்க சொல்லி இருப்பதாக குறிப்பிட்டார். அப்போது எழுந்த சிரிப்பலை அடங்க நீண்ட நேரம் ஆனது.
Tags:    

மேலும் செய்திகள்