"புதிய நிறுவனங்களில் 60 % தமிழர்களுக்கு வேலை" - அமைச்சர் எம்.சி. சம்பத்

தமிழகத்தில் தொழில் தொடங்கும் தொழிற்சாலைகளில், 60 சதவீதம் வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத், கூறியுள்ளார்.

Update: 2020-01-07 18:49 GMT
தமிழகத்தில் தொழில் தொடங்கும் தொழிற்சாலைகளில், 60 சதவீதம் வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத், கூறியுள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர்கள், வேலை இல்லாமல் தவிப்பதாகவும், வேலையை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை என்றும் திமுக எம்.எல்.ஏ. பிச்சாண்டி, பேசினார். இதற்கு, பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத், தொழில் துவங்க உள்ள சியட், ஃபாக்ஸ்கான் நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் 60 சதவீதம் பேருக்கு அரசு மானியத்துடன் பயிற்சியும், வேலையும் வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்திருப்பதாக  பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்