சூடான் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு நிதியுதவி - தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக சூடான் நாட்டின் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, உயிரிழந்தவர்களின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.