சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன் - 13 நாள் நீதிமன்ற காவல்
பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு போதுமான வசதி இல்லை என கூறியதால், சேலம் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பின்னர், அங்கிருந்து சேலத்திற்கு புறப்பட்டு வந்த நிலையில், மதுரை சிறையில் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இதனை தொடர்ந்து அவர், காலை 9 மணி அளவில் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.