2019ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் : குமரியில் ஆதவன் அழகை ரசித்த பயணிகள்

2019ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏராளமானோர் திரண்டு கண்டு ரசித்தனர்.

Update: 2019-12-31 21:09 GMT
இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் மிகுந்தது. முக்கடல் சங்கமிக்கும் அங்கு, காலை உதயம் மற்றும் பொழுது மறைவின் போது, பொன் தட்டாக மின்னும் சூரியன், கண்களுக்கு விருந்தளிக்கும். 2019 ஆம் ஆண்டின் கடைசி நாளில், செக்க சிவந்த வானத்தை முத்தமிட்டவாறு, கடல் தாயின் மடியில் ஆதவன் தவழ்ந்ததை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்