ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைன் பதிவு - கைவிட வலியுறுத்தி காளை வளர்ப்போர் போராட்டம்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக காளை வளர்ப்போர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக காளை வளர்ப்போர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி, திருவானைக்காவல் பகுதியில், ஜல்லிகட்டு காளை வளர்ப்போர், தங்களது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நூதன போராட்டம் நடத்தினர். ஆன்லைன் மூலம் பதிவு செய்தால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்றிரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், விருப்பப்படும் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த அணிவகுப்பு, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.