2ஆம் கட்ட தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் - அமைச்சர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

மத்திய அரசு விருது கொடுத்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிக்கிறார் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2019-12-28 07:44 GMT
மத்திய அரசு விருது கொடுத்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிக்கிறார் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். 2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உள்ள அவர், மதுரை மாவட்டம் புளியங்குளம், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் பேசுவதை எந்த தமிழனும் பார்த்து கொண்டு இருக்க மாட்டான் என்றார். மக்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தல் நடப்பதை தான் விரும்பி உள்ளனர் என்றும், மக்கள் ஆதரவு அதிமுகவுக்குதான் என்றும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்