"ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனு - டிச.30ல் விசாரணை
நகர்புற தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், வழக்கு தொடர்ந்துள்ளது.
நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை, நகர்புற அமைப்புகளுக்கான தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான என்றும், தற்போதைய தேர்தல் முடிவுகள், நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்என கூறியுள்ளது. விரைவில், நகர்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மனு, வரும் 30ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.