வழி தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுமிகள் : பெற்றோர் ஏழ்மை காரணமாக காப்பகத்தில் சேர்ப்பு
காஞ்சிபுரம் அருகே வழி தெரியாமல் சுற்றித்திரிந்த இரண்டு சிறுமிகளை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில், சுற்றிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அவ்வழியே சென்ற போலீசார் விசாரணை செய்துள்ளனர். இருவரும், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்த விஜயா, பச்சையம்மாள் என்பதும், தாயிடம் கோபித்துக் கொண்டு, வந்தவாசியில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. பெற்றோர் ஏற்கெனவே வேலை செய்த வீட்டின் உரிமையாளரை காண வந்ததாகவும், ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், வந்தவாசி திரும்ப வழி தெரியாமல் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர். அந்த பெற்றோரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.