முகநூல் மூலம் காதலிப்பதாக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது..!
ஓசூர் அருகே முகநூல் மூலம் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள அத்தல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரும், குனிகல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகளும் முகநூல் மூலம் காதலித்துள்ளனர். அப்போது இளம் பெண்ணுடன் பல முறை சசிகுமார் உல்லாசமாக இருந்த நிலையில், திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, இளம்பெண் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.