வாக்குப்பதிவு தினம் : "சம்பளத்தை பிடித்தம் செய்தால் கடும் நடவடிக்கை" - தமிழக அரசு எச்சரிக்கை
வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியம் பிடித்தால் நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த வணிகம், வர்த்தக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காமல் இருந்தாலோ அல்லது, ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தாலோ சட்டத்தை மீறியதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.