கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

கரூரில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-26 17:57 GMT
கரூரில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தும்பிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  குமாரவேலு என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சிதம்பரத்தை சேர்ந்த நிர்மல்ராஜ், மயிலாடுதுறையை சேர்ந்த சத்யராஜ், நாகராஜ் ஆகிய மூன்று பேர்  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துள்ளனர். இதனை  கண்ட தும்பிவாடி கிராம மக்கள் 3 பேரையும் பிடித்து தேர்தல் பறக்கும் படை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அந்த 3 பேரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்