ஊரக உள்ளாட்சி தேர்தல் - நாளை வாக்குப் பதிவு -பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.

Update: 2019-12-26 08:17 GMT
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும்  இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு நாளை 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக தாலுகா காவல்துறையினர் 33 ஆயிரத்து 920 பேரும், ஆயுதப்படை காவலர்கள் 9 ஆயிரத்து 959 பேரும்,  தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் 4 ஆயிரத்து 700 பேர் என மொத்தம் 48 ஆயிரத்து 579 போலீசார், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோன்று,  காவலர்கள் அல்லாத 14 ஆயிரத்து 500 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்