கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு : மக்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணன் என்பவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணனின் உறவினர்கள், மற்றும் அப்பகுதி மக்கள் முறையான நுழைவு பாலம் அமைக்கவேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சேலம் - கோவையை இணைக்கக்கூடிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.