கோவை: குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பேரணி - பெண்கள், குழந்தைகளுடன் திரண்ட இஸ்லாமியர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர். கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர்கள், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதிகளை இணைக்கும் ஆத்துப்பாலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் மூலம் ஒளி அடித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.