"துப்பாக்கி சூடுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் தொடர்பில்லை - துப்பாக்கி சூடு நடத்தியது அரசுதான்"
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய, வேதாந்தா நிறுவன வழக்குகள், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
* அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற வேதாந்தா, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசு குறைந்துள்ளதாக கூறுவது தவறு என்று கூறியது.
* தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்துவது, அனல் மின் நிலையம் தான் என்றும், முதலில் அதைத்தான் மூட வேண்டும் என்றும் வாதிட்ட வேதாந்தா,
* டெல்லி, சென்னையை விட தூத்துக்குடியில் காற்று மாசு குறைவு என்றும் வேதாந்தா திட்டவட்டமாக தெரிவித்தது.
* ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசு குறைந்து விட்டதாக கூறுவது தவறு என்ற வேதாந்தா, வேலூர் தோல் தொழிற்சாலைகள், திருப்பூர் நூற்பாலைகளை விட, ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துகிறதா எனக் கேள்வி எழுப்பியது.