ஸ்ரீநெடுஞ்சேரி: வார்டு வரையறை குளறுபடி - தேர்தல் ஆணையம் மீது பொதுமக்கள் புகார்
கடலூர் மாவட்டம் ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் வார்டு வரையறை குளறுபடியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் வார்டு வரையறை குளறுபடியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் 5 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும் நான்கு வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 வார்டு ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 428 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தங்களின் வாக்குரிமை திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.