"ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு"

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் சங்கு நகர் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-16 23:27 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் சங்கு நகர் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.  இதனை அறியாது வழக்கம் போல் பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து சென்ற கொண்டிருந்த நிலையில், வங்கி ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு கேமரா திருப்பி வைக்கப்பட்டிருந்ததும் அப்போது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்