"டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேநேரம், வருகிற 19 ம் தேதி , தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.