"தீர்த்தவாரி வைபவம் கோலாகலம் - திரளான பக்தர்கள் புனித நீராடினர்"

கும்பகோணம் ராகு பகவான் கோவிலில், தீர்த்தவாரி வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-12-15 18:51 GMT
கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான இன்று அம்பாள் , ராகுபகவான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் அருகே உள்ள  சூரிய புஷ்கரணியில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து திருக்குளத்தில் அஸ்திரதேவர் மூன்று முறை முங்கி எழ, பக்தர்கள் புனித நீராடி தங்கள் தோஷம் நிவர்த்தி பெற பிரார்த்தனை செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்