கடலூர்: ஏலம் போன பதவி - அதிகாரிகள் விசாரணை

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்போன தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2019-12-11 03:13 GMT
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்போன தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்திரவின்பேரில்  அதிகாரிகள் மற்றும்  போலீசார் நடுக்குப்பம் கிராம மக்களிடம்  விசாரணை நடத்தினர். தேர்தல் நடத்தை விதி அமுலில் இருக்கும் போது நடுகுப்பம் கோயிலில் நடைபெற்ற ஊர் கூட்டம் சம்மந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காததால் அந்த கிராம ஊராட்சி செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பபட்டது.
Tags:    

மேலும் செய்திகள்