உள்ளாட்சி தேர்தல்: திமுக மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

Update: 2019-12-11 01:48 GMT
1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இடஒதுக்கீட்டை அமல்படுத்திய  பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை  வெளியிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.  மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பின்படி வார்டுகளை  மறுவரையறை செய்து இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்