"ஆபத்தில் 5 லட்சம் இலங்கை தமிழர்கள்" - கே.எஸ். அழகிரி

குடியுரிமை மசோதாவை நடைமுறைப்படுத்தினால் இந்திய ஜனநாயகமே ஆட்டம் காணும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-10 09:20 GMT
குடியுரிமை மசோதாவை நடைமுறைப்படுத்தினால் இந்திய ஜனநாயகமே ஆட்டம் காணும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளுடன் திண்டுக்கலில் ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை தடைச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் 5 லட்சம் பேரின் நிலை ஆபத்தில் உள்ளது என்றார். ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால் விலைவாசி உயரும் என்ற அவர், இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். அந்நிய முதலீடு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பணப் புழக்கம், சந்தை விற்பனை ஆகியவை முடங்கி உள்ளதாக கே.எஸ். அழகிரி வேதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்