"மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வித்தியாசமான வழக்கு

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வரும் வேளையில் மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க கோரி வித்தியாசமான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-12-10 04:30 GMT
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வரும் வேளையில் மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க கோரி வித்தியாசமான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டுள்ளது.  தேனியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்