சசிகலா வீட்டை இடிக்க நடவடிக்கை : மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு
தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி மிஷன் சாலையில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த செப்டம்பர் மாதம் மாநகராட்சி சார்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டது. பள்ளிக்கு அருகே உள்ளதாலும், இடியும் தருவாயில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாலும், 15 நாட்களுக்குள் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசில் கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை கட்டடம் அப்புறப்படுத்தப்படாததால், மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் ஒரு நோட்டிஸ் ஒட்டியுள்ளது. அதில் கட்டடம் அபாயகரமான நிலையில் உள்ளதால், அதற்குள் செல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.