நெல்லை: தாமிரபரணியில் 4-வது நாளாக வெள்ளம்
தாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு ஆகியவை நிறைந்தன. வரத்து அதிகரித்ததால், அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், தாமிரபரணியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரங்களை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை சற்று குறைந்துள்ளதால், படிப்படியாக வெள்ளம் குறையும் எனவும் கூறப்படுகிறது.