ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2019-11-26 19:06 GMT
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கால்நடைப் பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவு, விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகம், தொழில் உருவாக்கப் பிரிவு என 5 பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஜனவரி மாதத்தில் இந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்