ராமேஸ்வரம்: அவசரகதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ராமேஸ்வரம் பகுதியில் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.
ராமேஸ்வரம் பகுதியில் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். அங்கு சுமார் ரூபாய் 7 கோடியில் தார்சாலை அமைக்க ஆறு மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து சாலைகளில் மழைநீர் ஓடும் நிலையில், அதன் மத்தியில் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மக்களின் பணத்தை வீண் செய்யாமல் முறையாக சாலை அமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.