"பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும்"
இட ஒதுக்கீடு அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்க உத்தரவிடக்கோரி, நெடுஞ்சாலை துறை, அறநிலைய துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் 62 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இட ஒதுக்கீட்டின் படி பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது என்பது, 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி விதிகள் சட்டப்பிரிவு 3-ன் படி, சட்ட விரோதம் என தீர்ப்பளித்துள்ளனர்.