பள்ளி மாணவியிடம் பேசியதாக இளைஞர் மீது புகார் : கார் கண்ணாடியை உடைத்து ஊர் மக்கள் தாக்குதல்

சேலம் அருகே பள்ளி மாணவியிடம் பேசியதாக இளைஞர்களின் கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-11-12 08:11 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவரின் மகன் ஹரிகிருஷ்ணன் தாராபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் சகுப்பு படித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் உறவினர்கள் ஹரிகிருஷ்ணனை அடித்துள்ளனர். மேலும் மாதையன் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்ற போது அவர்களை சரண்யாவின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் மாதையனின் மகள், மகன் உள்ளிட்டோர் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்