மதுரையில் தவறவிட்ட (4 சவரன் வளையல், ரூ.7200) பை, விருதுநகரில் மீட்பு

நான்கு சவரன் வளையல், ஏழாயிரம் ரூபாய் பணத்துடன் மதுரையில் தவறவிட்ட பையை, விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.;

Update: 2019-11-09 13:42 GMT
நான்கு சவரன் வளையல், ஏழாயிரம் ரூபாய் பணத்துடன் மதுரையில் தவறவிட்ட பையை, விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர். மதுரையைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் செல்ல புறப்பட்டார். அவசரத்தில், விருதுநகர் செல்லும் அந்த்யோதயா ரயிலில் ஏறிய அவர், உடனடியாக இறங்கினார். அப்போது, தங்களின் பையை ரயிலிலேயே தவறவிட்டு விட்டனர். இதுகுறித்து, உடனடியாக மதுரை ரயில்வே போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், விருதுநகர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு குறிப்பிட்ட பெட்டியில் சோதனையிட்ட போலீசார், நகை மற்றும் பணத்துடன் பையை மீட்டு மகேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்