பள்ளிக்கு புதிய கட்ட‌டங்கள் கட்டி கொடுத்த கிராம மக்கள் - விருந்து படைத்து கொண்டாடிய மக்கள்

அரசு கண்டுகொள்ளாவிட்டாலும் கிராம மக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்றுள்ள ஓர் அரசு பள்ளி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

Update: 2019-11-09 09:31 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையூர் பட்டியில் ஆயிரத்து 954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த அரசு பள்ளி.கிராம மக்களிடம் பணம் வசூலித்து தான் இந்த பள்ளி அப்போதே கட்டப்பட்டதாக கூறுகின்றனர் அந்த கிராம மக்கள் கற்களாலும் ஓடுகளாலும் கட்டப்பட்ட இந்த பள்ளி 60 ஆண்டுகளை கடந்து விட்டதால், வலுவிழந்து ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகிறது.ஓட்டு கட்ட‌டம் என்பதால் அவ்வப்போது திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வந்துள்ளன.அரசு சார்பாக வழங்கப்படும்  கல்வி உபகரணங்களை  பாதுகாக்க  உறுதி தன்மை கொண்ட கட்ட‌டம் வேண்டும் என்பதால் இந்த பகுதி இளைஞர்கள் தாமாக முன்வந்து பள்ளிக்கு கட்ட‌டம் கட்ட முடிவெடுத்துள்ளனர். அதன் படி, மக்களிடம் 7 லட்சம் ரூபாய் வரை வசூலித்து. இந்த கட்ட‌டங்கள்  திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்த‌ன... இதனை முன்னிட்டு, மக்கள் பால் காய்ச்சியும், இனிப்புகள் மற்றும் உணவு வழங்கியும் பள்ளி வளாகமே திருவிழாக்கோலமாக காட்சியளித்த‌து2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்ட‌டத்தை கட்டி கொடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்