பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு:மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் சந்தித்தார்
பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டார். உள்ளாட்சியிலே நல்லாட்சி அளிப்பதே தற்போதைய குறிக்கோள் என்றும், தமாக தனித்தன்மையோடு இயங்கும் என்றும் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்தார்.