"டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் திமுக களமிறங்கி உள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் நடவடிக்கையில், திமுக களமிறங்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-22 13:12 GMT
டெங்கு காய்ச்சல் நடவடிக்கையில், திமுக களமிறங்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முழுமையாக ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டினார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், திமுகவினர் ஈடுபட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்