பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை

பிரதமர் மோடி, மாமல்லபுரம் கடற்கரையோரம் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது எழுதிய "அலைகடலே அடியேனின் வணக்கம் " என்ற கவிதை, தற்போது வெளியாகி உள்ளது.

Update: 2019-10-20 08:40 GMT
பிரதமர் மோடி, மாமல்லபுரம் கடற்கரையோரம் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது எழுதிய "அலைகடலே அடியேனின் வணக்கம் " என்ற கவிதை, தற்போது வெளியாகி உள்ளது. பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ள கவிதையில், " அளப்பரிய, முடிவற்ற ஒப்பில்லாத  வர்ணனைகளை கடந்த நீலக்கடலே, உலகிற்கு உணவளிக்கும் நீ, பொறுமையின் இலக்கணம், ஆழத்தின் உறைவிடம்'' என்று தொடங்கியுள்ளார். "வாழ்வின் பேரழகு நீ, விஷத்தை அடக்கிய நீலகண்டன்போல், நீயும் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு, புதுவாழ்வை பிறர்க்களித்து சொல்கிறாய், சிறந்த வாழ்வின் மறைபொருளை" என்று கவிதையை முடித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்