அரசியல் களத்தில் விஜய்யுடன் இணைகிறாரா சகாயம்?

நேர்மைக்கு பெயரெடுத்த ஐ.ஏ.எஸ். சகாயம், தனது 'மக்கள் பாதை' அமைப்பின் மூலம் சமூகப் பணி ஆற்றி வருகிறார்.

Update: 2019-10-20 02:24 GMT
புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், தமிழ் மீது பற்றுள்ளவர் என்பதுடன், லஞ்சம், ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அதோடு, அரசியல் கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை வீச தயங்கியதே கிடையாது. இதன் காரணமாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர் நடத்தும் மக்கள் பாதை அமைப்பின் சார்பில், சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில், முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, நேர்மையாளர் விருது வழங்கினார் சகாயம்.  மக்கள் பாதை அமைப்பு அரசியல் கட்சியாக வேகமெடுக்கும் விதமாக மாணவரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் போன்ற காட்சிகள் விழாவில் அரங்கேறின.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மாறமாட்டார்கள், இளைஞர்கள் தான் மாற வேண்டும் என்றும், வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல தலைவர் கிடைப்பார் என்றும் குறிப்பிட்டார். இதனிடையே,, லஞ்சம் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய், பொது தளத்திலும் அரசியலை விமர்சனம் செய்ய அஞ்சியதில்லை. இப்படி லஞ்சம், ஊழலுக்கு எதிராக, சகாயம் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில் சகாயத்தை சந்திரசேகர் வெகுவாக பாராட்டி பேசியிருப்பது, எதிர்காலத்தில், விஜய்யும், சகாயமும் சேர்ந்து செயல்படுவதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்