ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி: 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

ஊட்டியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

Update: 2019-10-18 20:16 GMT
ஊட்டியில், நீலகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது குறித்தும், ஏர் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்