"இடைத்தேர்தல் தொகுதிகளில் 22,847 லிட்டர் மதுபானம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார். அவர்களில் ஒருகோடியே 87 லட்சம் பேர் மட்டுமே தங்கள் விவரங்களை இதுவரை சரிபார்த்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே அனைத்து வாக்காளர்களும் தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் 48 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 22 ஆயிரத்து 847 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.