தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு
தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. வண்ணாரபேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் மற்றும் பாளையங்கோட்டை கோயில்களில் இருந்து வீதி உலா வந்த சப்பரங்கள், இன்று காலை ராமசாமி கோயில் திடலில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய்கள் உடைத்தும், பழ வகைகள் சமா்பித்ததும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். தொடர்ந்து இன்று மாரியம்மன் கோயில் திடலில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் :
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசை சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. குலசை முத்தாரம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், திருச்செந்தூர் கடலில் குளித்து நீராடி மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் குலசை முத்தாரம்மனை வழிபட்டு தங்களின் காப்பை அவிழ்த்து விரதத்தை முடிக்க உள்ளனர்.