"உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுக தான் காரணம்" - அமைச்சர் காமராஜ்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் கரிலாயத்தை நெல்லை மாவட்டம் காரியாண்டியில் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2019-10-09 13:54 GMT
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின்  தேர்தல் கரிலாயத்தை  நெல்லை மாவட்டம் காரியாண்டியில் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது, அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் தோல்வியின் விரக்தியில் பேசி வருவதாக கூறிய அவர், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம் திமுக தான் என்றும் குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்