மோடி - சீன அதிபர் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென தமிழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை மறுதினம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென தமிழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சந்திப்பு தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு, தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 1956 ஆம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் சூ என்லாய் மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள குழிப்பந்தண்டல கிராமத்திற்கு வருகை தந்ததையும் அவர் நினைவு கூறியுள்ளார்.