மோடி - சீன அதிபர் வருகை : இறுதிக்கட்ட ஏற்பாடு - பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜி- ஜின்பிங்கும் வரும் 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, இறுதிக்கட்ட பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Update: 2019-10-08 21:57 GMT
2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜி- ஜின்பிங்கும் வரும் 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, இறுதிக்கட்ட பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. நகரில் திரும்பிய திசையெங்கும் அழகு ஓவியங்களும், நடைபாதை அமைக்கும் பணிகளும் இரவு - பகலாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரத்தை சுத்தமாக உருவாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட, மற்றொரு பக்கம், 5 நாட்களுக்கு சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டு விட்டன. இதனிடையே, இரு பெரும் தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் சுமார் 10 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்