பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருவதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் மாமல்லபுரம் வருவதையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-10-08 11:37 GMT
முக்கிய பிரமுகர்கள் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க உள்ளதால், போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு  காரணங்களுக்கான இரண்டு நாட்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வந்துள்ள வெளிநாட்டினர், வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர்  காவல் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டும். தண்ணீர் லாரி உள்பட அனைத்து சரக்கு போக்குவரத்து வாகனங்களும் 11 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 ஆம் தேதி மாலை வரை நிறுத்தப்படுகிறது. 

இரண்டு நாட்களிலும், பிரமுகர்கள் செல்லும் நேரங்களில்  கிண்டி ராஜீவ் காந்தி சாலை முதல்  ஓ.எம்.ஆர். சாலை வழியாக மாமல்லபுரம் வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. பிரமுகர்கள் செல்லும் சாலை வழியில் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் செயல்பாடுகள், புதியவர்களின் நடமாட்டம்  குறித்த தகவலை போலீசுக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்