சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் பழனி, சுப்பிரமணி, சங்கரன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோரை போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் பழனி, சுப்பிரமணி, சங்கரன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோரை போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டார்லி, வழக்கில் சிறையில் அடைக்க கூடிய பிரிவு இல்லை என்பதால், இதில் போலீசாரே நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். இவர்கள், 4 பேருக்கும் ஜாமின் வழங்க போலீசாருக்கு நீதிபதி, அறிவுரை வழங்கினார்.