இரண்டு கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை : காவல்நிலையம் அருகே நடந்த துணிகரம்

சென்னை ராயபுரத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளையடிக்க பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-28 07:45 GMT
சென்னை ராயபுரத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளையடிக்க பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள செங்காளம்மன் கோவில் உண்டியலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவர் ஏறி உள்ளே குதித்து அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்தனர். பூட்டை உடைக்க முடியாததால் அருகில் ஒயர்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களை அறுத்து லேப்டாப்பை திருடினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து சில்லறையை மடியில் கட்டி செல்லும் வடமாநில இளைஞர்  CCTV காட்சி வெளியான நிலையில் மீண்டும் 2 கோவில்களில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்