நவராத்திரி - தமிழக, கேரள எல்லையில் சாமி சிலைகள்
நவராத்திரியை முன்னிட்டு, பத்மநாபபுரம் அரண்மணையில் இருந்து புறப்பட்ட சாமி சிலைகள், தமிழக கேரள எல்லையான களியக்காவிளையை அடைந்தன.
நவராத்திரியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு, பத்மநாபபுரம் அரண்மணையில் இருந்து புறப்பட்ட சாமி சிலைகள், தமிழக கேரள எல்லையான களியக்காவிளையை அடைந்தன. அங்கு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தலைமையில் இரு மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர்.