முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளாண் பணிகள் - யூரியா கிடைக்காமல் விவசாயிகள் அவதி

விவசாயிகளுக்கு எளிய முறையில் யூரியா உர மூட்டைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-09-27 10:20 GMT
விவசாயிகளுக்கு எளிய முறையில் யூரியா உர மூட்டைகளை வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை பொழிய தொடங்கியுள்ள நிலையில், ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரே ஒரு கடையில மட்டுமே யூரியா கிடைப்பதால் அதனை வாங்க பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். யூரியா உரம்  வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் கை ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்