சாலை பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் : வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
மதுராந்தகம் அருகே சாலையை சீரமைக்க தடைவிதித்த வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.
மதுராந்தகம் அருகே சாலையை சீரமைக்க தடைவிதித்த வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. காஞ்சிபுரம் மாவட்டம் பூரியம்பாக்கத்தில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், அதில் குறிப்பட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என அதிகாரிகள் கூறியதால் சாலை போடும் பணி நிறுத்தப்பட்டது.